MediaTalks Logo
Header Advertisement
cinema news
1 November 2026 at 16:15•103 Views

இசைக் கடவுள் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இசைக் கடவுள் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

ஒரு பாடலுக்கு ஆறுமாதம் போராடுகிறவர்களுக்கு மத்தியில், தனது "கடவுள் தந்த பரிசு" திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த ஆறு நாட்களில் அற்புதமான ஆறு பாடல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்து கொடுத்த இசைக் கடவுள் இளையராஜாவை, மக்கள் நாயகன் ராமராஜன், 'கடவுள் தந்த பரிசு' இயக்குநர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்து, தான் கடவுளாக மதிக்கும் இளையராஜாவிடம் ஆசி பெற்றார் ராமராஜன்!

Image
Image

காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் படக்குழுவினர், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: