MediaTalks Logo
Header Advertisement
cinema news
2 November 2026 at 21:39•5 Views

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஏழு வயதாகும் ஐரா மற்றும் இன்று (அக்டோபர் 30) தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வ் ஆகியோருக்கு ‘ராமாயணா’ திரைப்படம் மறக்க முடியாத ஸ்பெஷல் நினைவாக எப்போதும் இருக்கும்.

இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அத்தோடு, ராவணன் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார். நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை அவரது குழந்தைகள் பார்த்திருப்பதும் நெகிழ்வான தருணமாக அமைந்துள்ளது.

Image
Image

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் ஐரா மற்றும் யதர்வ் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் காரணம்தான். ஐரா என்ற பெயர், மகாலட்சுமியின் மற்றொரு பெயரான ஐராவதியிலிருந்தும், யதர்வ் என்ற பெயருக்கு ‘முழுமையானவன்’ என்றும் பொருள். மேலும், யஷ், ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களை இணைத்தே யதர்வ் என்ற பெயரைத் தேர்வு செய்ததாகவும் யஷ் மற்றும் ராதிகா தெரிவித்துள்ளனர்.

இப்போது ‘ராமாயணா’ திரைப்படம் அவர்களின் நினைவுகளில் தனியிடம் பிடித்திருப்பதன் மூலம், இந்த இதிகாசத்திற்கும் யஷ் குடும்பத்திற்கும் இடையே அழகான தொடர்பு உருவாகியுள்ளது.

இன்னும் ஐந்து நாட்களில் அதாவது, நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது ‘ராமாயணா’ திரைப்படம் வெளியாகிறது. இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: