MediaTalks Logo
Header Advertisement
cinema news
9 November 2026 at 13:22•49 Views

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ‘காகித மலர்’

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ‘காகித மலர்’

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!

தயாரிப்பாளர் திருமதி பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான திருமதி பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image
Image

திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன.

திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குத் தமிழில் பிரேமா செழியனும், ஆங்கிலத்தில் அதிதா செழியனும் பதிலளித்தனர். நிகழ்ச்சியின் போது அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

‘காகித மலர்’ திரைப்படம் குறித்து விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தெரிவித்த பாராட்டுகளும் கருத்துகளும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் (Jury) கென்ஜி இஷிசாகா (Kenji Ishizaha) கூறியதாவது:

“டிஜிட்டல் யுகத்தில் குறைந்த பட்ஜெட்டில்கூட மிகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும். திரைப்பட உலகில் ரத்தினங்களைப் போன்ற அருமையான படைப்புகளை நாங்கள் கண்டிருக்கிறோம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் செழியனின் ‘காகித மலர்’. இந்தத் திரைப்படம் உலகத் தரத்தைக் கொண்ட படைப்பாக அமைந்துள்ளது.

பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பலரும் பாலிவுட் திரைப்படங்களைத்தான் நினைக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டைத் தாண்டியும் இந்தியாவில் பல்வேறு வகையான தனித்துவமான திரைப்படங்கள் உருவாகின்றன என்பதை உலக ரசிகர்களுக்குக் காட்டவே இந்தப் படத்தைத் தேர்வு செய்தோம்.

Image
Image

நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே, இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்ததுடன், மிகவும் பாராட்டி ரசித்தனர்.

திரைப்பட விமர்சகர் கேட்டி ரைஃப்(Katie Rife),

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இனிமையான(Sweet) , இலக்கிய நயம் மிக்க (Bookish),தமிழ் திரைப்படமான "காகித மலர்" (The Paper Flower) மற்ற திரைப்படங்களிலிருந்து தனித்துவமாகத் தெரிந்து(Stood out) எங்களது கவனத்தை ஈர்த்தது, என்று பாராட்டியுள்ளார்.

மேலும், ‘காகித மலர்’ திரைப்படத்தை ஜப்பான் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் பணி புரிந்த எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத், ஒலி அமைப்பாளர் தபஸ் நாயக், செழியனின் உதவியாளர்கள் பிச்சுமணி, ஆர்.பி. ராஜா, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், பேச்சியப்பன், நடிகர் பராந்தக சோழன், நடிகை ஜனனி செண்பகா உள்ளிட்ட அனைவருக்கும், மற்றும் உயிரெழுத்து பதிப்பகம் சுதிர், அன்னம் பதிப்பகம் கதிர் மற்றும் பபாசி அமைப்பிற்க்கும் தயாரிப்பாளர் பிரேமா செழியன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Image
Image

மேலும், இந்த வெற்றியும், அங்கீகாரமும், பாராட்டுகளும், அனைத்துமே "எங்கள் அன்பிற்குரிய செழியன் அவர்களின் திரைப்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்"

என்றும் தெரிவித்துள்ளார்.

செழியனின் ‘காகித மலர்’ திரைப்படம் இனி பல்வேறு உலக நாடுகளிலும் தனது பயணத்தைத் தொடரவுள்ளது.

அவரது கலைப்பயணம் உலகெங்கும் தொடர்ந்து ஒலிக்கட்டும்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: