MediaTalks Logo
Header Advertisement
cinema news
8 November 2026 at 14:30•15 Views

சர்வதேச அரசியலை பேசும் திரைப்படம் "சிவப்பு நட்சத்திரம்"

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
சர்வதேச அரசியலை  பேசும் திரைப்படம் "சிவப்பு நட்சத்திரம்"

பணத்தை பதுக்குவதால் இயற்கை வளங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்படுகின்றன... தானியங்களை பதுக்குவதால் செயற்கையாக பஞ்சங்கள் உருவாகின்றன.. இதற்கான சட்டங்களும் திட்டங்களும் அயல்நாடுகளில் உள்ள தீவுகளில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற சர்வதேச அரசியலை, எந்தவித சமரசமும் இன்றி, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அலசுகிறது இந்த 'சிவப்பு நட்சத்திரம்' திரைப்படம். புதுமுகங்களை வைத்து துணிச்சலாக பேசுகிறது. பொதுவுடமை அரசியல் தலைவனாக, ஆசானாக பொன்வண்ணன் நடிக்கிறார். கதையின் நாயகனாக டல்ஹௌசி பிரபு, கதை நாயகியாக வர்ஷா மற்றும் முன்னணி நடிகர்கள் ஓஏகே சுந்தர், பழ கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Image
Image

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவு பி.கே, இசை டி.சி, ஸ்டண்ட் கனல் கண்ணன், எடிட்டிங் செந்தில் வீரா, நடனம் தினேஷ் மாஸ்டர், பாடல்கள் ஞானக்கரவேல், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு கர்ணா, டாக்டர் தினேஷ் முருகேசன். லீஹரி பிக்சர்ஸ் சார்பில் B.சின்னத்தம்பி, ஹரி சங்கர் தயாரிக்கிறார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: