MediaTalks Logo
Header Advertisement
cinema news
10 November 2026 at 10:10•149 Views

'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் நாகார்ஜுனாவின் 'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. 'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இது அவரது மூன்றாவது திரைப்படமாகும். இப்படத்தில் திறமையான நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

'கிங் 100 - King 100' படக்குழுவினர், இப்படத்தில் 'கர்ணா' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் அவர் ஒரு விதமான தீவிரமான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் காட்சி தருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Image
Image

அசோக் செல்வன் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான தோற்றத்தில் அசத்துகிறார். ஸ்டைலான மெரூன் நிறச் சட்டை அணிந்து, நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன் நாற்காலியில் மிகவும் இயல்பாகவும், அதேசமயம் மிரட்டலான தோரணையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் சிகரெட், அருகில் அலட்சியமாக வைக்கப்பட்டிருக்கும் காக்கி நிறக் காவல்துறை சீருடை மற்றும் முன்புறத்தில் 'கிங்' (King) எனும் சதுரங்க விளையாட்டின் தலைமைக்காயுடன் கூடிய சதுரங்கப் பலகை என இந்தப் போஸ்டரில் பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புகை மூட்டமான சூழலும், இருண்ட பின்னணியும் படத்திற்கு ஒரு மர்மமான ஈர்ப்பை அளிக்கின்றன.

அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை இதுவரை பார்த்திராத ஒரு புதிய அவதாரத்தில் படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மாற்றம் 'கிங் 100 - King 100' திரைப்படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றும் கதையில் அதன் முக்கியத்துவம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை நவீன் நூலி கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக N. சதீஷ்குமார் பணியாற்றுகிறார்.

நாகார்ஜுனா - தபு - அசோக் செல்வன் என ஒவ்வொருவரும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'கிங் 100 - King 100' திரைப்படம், படத்தின் புரமோஷன் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.

*நடிகர்கள்:*

'கிங்' நாகார்ஜுனா - தபு - அசோக் செல்வன்.

*தொழில்நுட்பக் குழு:*

எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன்

படத்தொகுப்பு : நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : N. சதீஷ்குமார்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: